2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உள்நாட்டு விமான சேவை இந்தியாவில் ஆரம்பம்

Editorial   / 2020 மே 25 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமான சேவையை  இன்று முதல் இந்தியா ஆரம்பித்துள்ளது.

கொரோனா ஊரடங்கினை அடுத்து, முதல்கட்டமாக உள்நாட்டு விமான போக்குவரத்தை மட்டும் இன்று ஆரம்பிக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்தது. 

இதன்படி, லக்னோ, டில்லி , கல்கத்தா, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான சேவை ஆரம்பித்துள்ளது. பயணிகள் 2 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையம் வந்துள்ளனர்.

சென்னையில் இருந்து இன்று காலை 6.35 மணிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் டில்லி கிளம்பி சென்றது. 

260 பேர் பயணிக்கக்கூடிய இந்த விமானத்தில் 111 பேர் மட்டுமே பயணம் செய்தனர். 

தமிழகத்தில், சென்னை - தூத்துக்குடி, சென்னை - மதுரை, கோவை - ஐ தராபாத், கோவை - மும்பை இடையே விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .