2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

ஊடகவியலாளர் அச்சுறுத்தல்; மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கனகராசா சரவணன்)

கொழும்பில் புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தன அச்சுறுத்தப்பட்டமையினை  கண்டித்து, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னாள் ஊடகவியலாளர்கள் இன்று சனிக்கிழமை(11) கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

கொழும்பில் நேற்றைய தினம்(10) வழக்கு ஒன்று தொடர்பிலான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவலர்த்தனவை போதைவஸ்து தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியுமால் ரங்க ஜீவவினால்   அச்சுறுத்தப்பட்டிருந்தார். 

இதனை கண்டித்து இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அந்தவகையில் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாத வண்ணமான ஒரு சிறப்பான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படுவதுடன், அச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படுவதும் முக்கியமான ஒன்றெனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .