2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஊழலுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை

Editorial   / 2018 ஜூலை 20 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர், நான்கு அமைச்சர்களுக்கு எதிராக வேண்டாம் என்று கூறும் போதே விசாரணைகளை முன்னெடுத்தமையின் காரணமாகவே வீடுசெல்ல  நேர்ந்ததென, மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், விஜித ஹேரத் இன்று (20), நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் திருத்த சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

குறித்த 4 அமைச்சர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணையை நிறுத்துமாறு அவருக்கு உயர்மட்டத்திலிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. எனினும் அவர் அதற்கு கட்டுப்படவில்லை. அதனால் அவர் வீடு செல்ல வேண்டியேற்பட்டது.

இன்று ஊழல் பற்றி நாட்டில் பெரிதாக பேசப்படாலும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அமைச்சுகளுக்கு கோடி கணக்கில் செலவிட்டு கட்டடம் பெறப்படுகிறது. ஆனால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு இதுவரை நிரந்த கட்டடம் ஒன்று இல்லை.

விசேட நீதிமன்றங்கள் மூன்றும் இன்று நிறுவப்படவில்லை. விரைவில் அவை நிறுவப்பட  வேண்டும் என,  விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X