2024 மார்ச் 28, வியாழக்கிழமை

எதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு 25 சதவீத வாய்ப்பு

Editorial   / 2021 ஜனவரி 21 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு, 25 சதவீதம் வாய்ப்பை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், எதிர்வரும் நாள்களில் தனிநபர் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 இந்த யோசனையை நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்த அவர், இவ்வாறான யோசனைகளை முன்வைப்பதற்குப் பதிலாக இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்குவதற்கான யோசனைகளை முன்வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில், நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,

 
இளைஞர்களுக்கு எந்த ஒழுக்கமும் இல்லை என்றால், அந்த ஒழுக்கத்தை வளர்ப்பதற்காக இளைஞர்களுக்கு ஏன் இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பிய அவர், இவ்வாறான திட்டங்களினூடாக, இளைஞர்களைத் தலைகுனியச் செய்துள்ளனர் என்றும் தெரிவித்தார். 

இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சிகளை அளிப்பதைவிடுத்து, பாடசாலைக் கட்டமைப்பில் உள்ள சாரணர் இயக்கம், கெடட் இயக்கம், பிற சங்கங்களைப் பலப்படுத்துவது தொடர்பில் சிந்திப்பதே பொருத்தமானது எனச் சுட்டிக்காட்டிய அவர், பாடசாலைக் கட்டமைப்பில் கவனம் செலுத்துவது சிறந்தது என்றும் தெரிவித்தார். 

பாடசாலைக் கட்டமைப்பில் இருந்து ஒழுக்கமான பல இளைஞர்களை நாடு பெற்றிருப்பதாகக் கூறிய அவர், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் இளைஞர் பிரதிநிதியாகச் செயற்படும் ஜயத்மா விக்கிரமரத்ன ஆகியோர் இதற்குச் சிறந்த உதாரண புருஷர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 


எனவே, ஒழுக்கமுள்ள இளைஞர் சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களுக்கு இராணுப் பயிற்சி அவசியமில்லை என்று தெரிவித்த அவர், தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக இளைஞர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X