2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘எப்.சி.ஐ.டிக்கு செல்வோம்’

Editorial   / 2018 மே 25 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

பௌத்த பிக்கு ஒருவருக்கு, வாகனமொன்றை வழங்கி உதவியமையை நிதி மோசடியாக குறிப்பிட்டு, டி.பி.ஏக்கநாயக்க எம்.பியை நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைத்திருக்கின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவருக்கு ஆதரவாக, அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும், அத்தினத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு செல்வோம் என அறிவித்துள்ளனர்.  

எமது நாட்டில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அரசியலமைப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், டி.பி.ஏக்கநாயக்க எம்.பி பௌத்த பிக்கு ஒருவருக்கு பெரேஹராவின்போது வாகனமொன்றை வழங்கியதாக குற்றஞ்சுமத்துப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர், லக்ஷ்மன் யாப்பா ​அபேவர்தன தெரிவித்துள்ளார்.  புஞ்சி பொரளையில் உள்ள சுதந்திர ஊடக மையத்தில் நேற்று (24) நடைபெற்ற, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர், இதனைத் தெரிவித்தார்.  

இதன்போது தொடர்ந்து உரையாற்றியவர்,  

“நிதி மோசடி விசாரணைப் பிரிவு இது தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு, எதிர்வரும் திங்கட்கிழமை (28) அவரை முன்னிலையில் ஆகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், திங்கட்கிழமை அவருடன் நிதி ​மோசடி விவசாரணைப் பிரிவுக்குச் செல்வோம்.   “அரசாங்கத்திலிருக்கும் போது இது தொடர்பில் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளப்படாத நிலையில், அரசாங்கத்திலிருந்து விலகிய பின்னர் பழிவாங்கும் நடவடிக்கையாக அவரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X