2024 மார்ச் 28, வியாழக்கிழமை

எராஜ் பெர்ணான்டோவுக்கு 5 வருடங்கள் சிறை

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை நகர சபையின் தலைவர் எராஜ்  ரவிந்ர பெர்ணான்டோ மற்றும் பிரேமசிறி பரனமான ஆகிய இருவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்றைய தினம் (02) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2014ஆம் ஆண்டு மத்தல சர்வதேச விமானநிலையத்தையும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் பார்வையிடச் சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரை குழுவொன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது. 

தம்மைத் தாக்கிய கும்பலுக்கு ஹம்பாந்தோட்டை மாநகரசபை மேயரே தலைமை தாங்கிவந்ததாகவும், அவர் கைத்துப்பாக்கியுடன் தம்மைத் துரத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகத்திடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி கைது செய்யப்பட்ட  எராஜ்  ரவிந்ர பெர்ணான்டோ, பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இன்றைய தினம் (02) தீர்ப்பினை அறிவித்துள்ளது.

இதேவேளை, தான் கையில் விளையாட்டுத் துப்பாக்கியையே வைத்திருந்தாக எராஜ்  ரவிந்ர பெர்ணான்டோ கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X