2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எல்லை நிர்ணயங்கள் ’95% மாற்றமில்லை’

Editorial   / 2017 நவம்பர் 17 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

"முன்னைய அரசாங்கத்தால் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த எல்லை நிர்ணயங்களையே, தற்போதைய அரசாங்கமும் மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், முன்னைய அரசாங்கத்தின் எல்லை நிர்ணயங்கள், 95 சதவீதமளவில் மாற்றம் செய்யப்படவில்லை” என்று, விசேட பணிப்பொறுப்புக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“எல்லை நிர்ணயப் பணிகள், மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவால் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இருப்பினும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையினால், அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன. பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், அப்பணியைத் தொடர்ந்து மேற்கொண்டது” என்றும் தெரிவித்த அமைச்சர், "உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தாமதத்துக்கு காரணமாகியிருந்த இந்த எல்லை நிர்ணயப் பிரச்சினை, தற்போது தீர்ந்துவிட்டது. இனி, தேர்தலுக்கு எந்தத் தடையும் இல்லை" என்றார்.

இதேவேளை, தேர்தலைத் தாமதப்படுத்துவது என்பது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நோக்கம் கிடையாது எனத் தெரிவித்த அவர், தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டுமென்பதே தமது நிலைப்பாடு எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X