2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’ஏற்றுமதி துறையில் காணப்படும் தடைகளை நீக்க கவனம் செலுத்தப்படும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏற்றுமதி துறையில் காணப்படும் தடைகளை நீக்க, எதிர்வரும் வரவு செலவு திட்ட முன்மொழிவின் போது, கவனம் செலுத்தப்படுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (18) பிற்பகல், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி விழாவில் கலந்துகொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தும் முக்கிய துறைகளில் ஒன்றான ஏற்றுமதி துறையை ஊக்கப்படுத்துவதற்கும், அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கும் அரசாங்கம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருவதாக, ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .