2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐ.தே.கவின் ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்கள்

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுப்பதாக, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் மஹிந்தவுக்கும் நாம் சவால் விடுக்கின்றோம் அதிக நாள்கள் செல்ல முன்னர் 70 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் அவரை துரத்த தயாராகவிருக்கின்றனர் என்றார்.

நாம் 10 தேர்தல்களுக்கு தயாராகவிருக்கின்றோம். ஜனநாயக ரீதியான தேர்தலுக்கு நாம் தயார் எமக்கு ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒன்றாகத் தாருங்கள் என்றார்.

இதேவேளை, முடிந்தால் ஜனாதிபதித் ​தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சவால் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்  இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கவும் தயாராகவிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்​கொண்டு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X