2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.நா பொருளாதார, சமூக பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றார் ஜனாதிபதி

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின், 72ஆவது பொதுச் சபை கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில், நேற்று (19) ஆரம்பமானது.

இலங்கை நேரப்படி, இன்று அதிகாலை 02:30 க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

 ‘மக்களை மையப்படுத்தி, நிலையானதோர் உலகில் அனைவருக்கும் சமாதானம் மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்காக உண்மையாக உழைத்தல்’ என்ற கருப்பொருளில், 72 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.    இதேவேளை, பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக, ஒழுங்குசெய்யப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக பேரவையின் கூட்டத்தொடர், நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.   

அரச தலைவர்கள் மட்டும் பங்குபற்றும் இக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

உலக நாடுகளின் கூட்டமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் எதிர்கால பயணம் எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.   

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்றிறனை மேலும் அதிகரித்தல், ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும் நிர்வாக செலவுகளை குறைத்து உறுப்பு நாடுகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் வகையில் செயற்படுவது தொடர்பாகவும் விரிவாக கவனம்செலுத்தப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .