2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘ஒரு கரும்புள்ளி’

Editorial   / 2018 மே 21 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலைமை, இலங்கை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக மாறி இருப்பதாகச் சாடிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வெளிநாடுகளுக்கு சென்றால் இதைப் பற்றியே கேட்கின்றனர் என்றும் தெரிவித்தார்.  

கண்டி- கட்டுகஸ்தோட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் புதிய கிளை அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு, நேற்று (20) நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். 

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,  

“கண்டி மாவட்டத்தில், பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள மக்கள் காங்கிரஸின் இந்தப் பிரதேச முக்கியஸ்தர்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். கட்சித் தலைமையும், உயர்பீடமும் உங்களுக்கு எந்த நேரத்திலும் உதவக் காத்திருக்கின்றது” என்று அவர் இதன்போது உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .