2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

ஓய்வூதிய உயர்வு இடைநிறுத்தம் விவகாரம்: மார்ச் 14இல் மனு பரீசிலனை

Gavitha   / 2021 ஜனவரி 25 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய உயர்வை நிறுத்தி வைக்க அரசாங்கம் எடுத்த முடிவை இரத்து செய்யுமாறு கோரி, 95 ஓய்வூதியதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மார்ச் மாதம் 14ஆம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதென, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (25) உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகியோரின் முன்னிலையில், இன்று (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் ஓய்வூதிய இயக்குநர் கே.ஏ.திலகரத்ன உட்பட 95 ஓய்வு பெற்றவர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் மற்றும் அமைச்சரவையின் உறுப்பினர்கள் சிலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய உயர்வை அரசாங்கத்தால் இரத்து செய்யப்பட்டு தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக, மனு தாக்கல் செய்த ஓய்வூதியதாரர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .