2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘கடன்களைச் செலுத்தவே வருமானத்தின் 90%’

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த தசாப்தத்தின்போது, அரச வருமானத்தில் 90 சதவீதமான அளவு, கடன் தவணைக் கட்டணங்களையும் அவற்றுக்கான வட்டிகளையும் செலுத்தவே செலவாகிறது என, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.   

நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 79.3 சதவீதமான அளவாக, நாட்டின் கடன் பொறுப்பாக உள்ளது எனத் தெரிவித்த அவர், 2017ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின்படி, அரச வருமானச் சமநிலையில், 193 நாடுகளில் 143ஆவது இடத்தில் இலங்கை காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.   

அரச வருமானத்தினதும் செலவினதும் அடிப்படையில், இலங்கை கீழ் நிலையிலேயே காணப்படுகிறது எனத் தெரிவித்த அவர், கடன்களைச் செலுத்துவதன் அடிப்படையில் பார்க்கும் போது, 95 நாடுகளில் 91ஆவது இடத்திலேயே இலங்கை உள்ளது எனவும் தெரிவித்தார்.   

இலங்கை, தற்போது நெருக்கடியான பொருளாதார நிலையில் காணப்படுகிறது எனத் தெரிவித்த அவர், இலங்கையின் முதலீடுகளை, கவனமாக முகாமை செய்ய வேண்டிய நிலையுள்ளது எனவும், இல்லாவிடின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்கிவிடுமெனவும் தெரிவித்தார்.

2005 தொடக்கம் 2016 வரையிலான காலப்பகுதியில், நெடுஞ்சாலைகளை நியமிப்பதற்கு 1,700 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துக்காகவும் கல்விக்காகவும் 588 பில்லியன் ரூபாயே செலவிடப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், ஹம்பாந்தோட்டை துறைமுகம் போலவும் மத்தல விமான நிலையம் போலவும், நெடுஞ்சாலைகள் வருவதற்கு அனுமதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்தார்.    

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .