2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கட்டுநாயக்கவில் போராட்டம் நிறைவுக்கு வந்தது

Editorial   / 2018 மே 18 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்காவிலுள்ள பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள், நேற்று நள்ளிரவு முதல் மேற்கொண்டுவரும் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை, சற்று முன்னர், நிறைவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன வழங்கிய எழுத்துமூலமான உறுதிமொழியைத் தொடர்ந்து, தொழிற்சங்க நடவடி்ககை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

மேற்படி அதிகாரிகள், மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று நள்ளிரவு முதல் , சட்டப்படி வேலைப் போராட்டத்தை முன்னெடுத்துவந்தனர்.

இதன்காரணமாக, விமான நிலையத்தில், அடிக்கடி நீண்டிவரிசையில் மக்கள் காத்திருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இருப்பினும், விமான நிலையத்தின் அன்றாடப் பணிகளுக்கு எவ்விதத் தடங்கலும் ஏற்படவில்லையென, விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தவிர, விமான நிலையத்துக்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களைச் சந்தித்துள்ள விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவ்வூழியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார்.

குடிவரவு - குடி​யகல்வுச் சேவைக்காக, புதிய அரசமைப்பொன்றை நிறுவுதல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்​வைத்தே, இந்தச் சட்டப்படி வேலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது விடயமாக, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், எந்தவொரு முடிவும் எட்டப்படாத நிலையில், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறினர்.

இந்தப் போராட்டம் காரணமாக, விமான நிலையப் பணிகள் மாத்திரமன்றி, நாட்டிலுள்ள அனைத்துத் துறைமுகங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகள் அனைத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

a


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X