2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொரோனா கொஞ்சுவதை பாருங்கள்

Editorial   / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டுக்குப் பின்னர் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. கொ​ரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில், ஒரு தரப்பினரை மற்றுமொரு தரப்பு குற்றஞ்சாட்டி கொண்டிருக்கின்றது.

அந்த வகையில்,

  • கொரோனா தொற்றாளர் 520 பேர், இன்று (22) இனங்காணப்பட்டனர் என இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
  • குளியாபிட்டிய நகரத்துக்கு பிரவேசிக்கும் சில பிரதேசங்களுக்கு செல்வதற்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
  • குளியாப்பிட்டிய நகர், துன்மோதர, மேற்ககு தண்டல்கமுவ, கனதுல்ல, கீழ் வீரமுவ ஆகிய பிர​தேசங்களுக்கான பயணங்களே வரையறுக்கப்பட்டுள்ளன.
  • பாணந்துறை பிர​தேசத்தில் தனியார் கைத்​தொழில் சாலையில் கடமையாற்றும் பணியாளர்களில் 29பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வீடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள் ஆவர்.
  • கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 216 பேர், இன்றையதினம் குணமடைந்துள்ளனர்.
  • புத்தாண்டுக்கு பஸ் வண்டியில் சுற்றுலாச் சென்ற, திவுலப்பிட்டிய மற்றும் வத்தளை பிரதேசங்களைச் சேர்ந்த 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
  • திவுலப்பிட்டிவை வசிப்பிடமாகக் கொண்ட 45 பேர், பஸ் வண்டியில் நுவரெலிய பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதில்,38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .