2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறியதால் தான் கலவரம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 01 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அரசாங்கம் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தால் மஹர சிறைச்சாலையில் கலவரம் இடம்பெற்றிருக்காது என சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அந்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

மஹர சிறைச்சாலை நிலவரம் இன்னமும் கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லை. இதனால் சிறைக்கைதிகளின் உயிர்களுக்கு இன்னமும் ஆபத்துள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசாங்கம் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் நிலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் சிறைக் கைதி களின் கோரிக்கைகளை செவிமடுத்திருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம்.

மார்ச் 16 ம் திகதி சிறைச்சாலைகளில் காணப்படும் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியிருந்தோம். ஜனாதிபதியை சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் நிலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக தலையிடுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந் தோம்.

சிறைக்கைதிகள் பாதிக்கப்படக்கூடிய ஆபத்துள்ளதால், எழுந்தமானமாக பிசிஆர் சோதனைகளை மேற்கொள்வதை விட அனைத்து சிறைக்கைதிகளையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம்

தடுப்புக்காவல் உத்தரவு காரணமாக பலர் சிறையில் உள்ளனர், சிறிய குற்றங்களை இழைத்த பலர் சிறைகளில் உள்ளனர், சிறைக்கைதிகள் நெருக்கமாக வைக்கப்பட்டுள்ள நிலையை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்.

அரசாங்கம் சுமார் 100 பேரை விடுவித்துள்ளதன் மூலம் சிறைக்கைதிகள் நெருக்கமாக உள்ள நிலையை முடிவிற்கு கொண்டுவர முயன்றுள்ளது.

ஆனால் இலங்கையில் 12000 கைதிகளை மாத்திரம் பேணக் கூடிய ஒரு அமைப்பில் தற்போது 20,000 கைதிகள் காணப்படுகின்றனர்.

நாங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம் அவர்கள் அவை எவற்றையும் நடைமுறைப்படுத்த வில்லை.கொரோனா வைரசின் முதலாவது அலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் இரண்டாவது அலையின் போது இலங்கையில் உள்ள 29 சிறைகளில் அனேகமானவற்றில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்றும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .