2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொரோனா வைரஸை தடுக்க தேசிய செயற்பாட்டுக் குழு

Editorial   / 2020 ஜனவரி 27 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய, தேசிய செயற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த செயற்பாட்டுக் குழு இன்று (27) மாலை 5.00 மணிக்கு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் கூடவுள்ளது.

இந்த தேசிய செயற்பாட்டுக்குழு ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, சுகாதார அமைச்சின் செயலாளர் ஹந்துனி ஜயரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ, மேலதிக செயலாளர்களான சுனில் டி அல்விஸ், லக்ஷ்மி சோமதுங்க, நிஹால் ஜயதிலக, விசேட வைத்தியர் அனுருத்த பாதெனிய ஆகியோரை உள்ளக்கிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .