2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கர்ப்பிணிகளே மிகவும் கவனம்

Niroshini   / 2021 மே 10 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெருக்கடியான இக்காலக்கட்டத்தில், கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள், சுகாதார ஆலோசனைகள், சேவைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பான விசேட அறிவுறுத்தலை, சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது.

தாயினதும் கருவில் இருக்கும் சிசுவினதும் நலன் மிக முக்கியம் என்பதால், அநாவசியத் தேவைகளுக்காக வீட்டைவிட்டு வெளியேறுவதை, முற்றாகத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்றோட்டம் குறைந்த இடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும், வெளியிடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசத்தை கட்டாயம் அணியுமாறும் கட்டாயப்படுத்தியுள்ளது.

மேலும், ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணல், மரண வீடுகள் மற்றும் நிகழ்வுகளுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளல், சவர்க்காரம் இட்டு கைகளை அடிக்கடிக் கழுவுதல் போன்ற சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், இரத்தப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு, நெஞ்சு மற்றும் வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைதல், உடல் வீக்கம் மற்றும் ஏனைய அறிகுறிகள் ஏற்படுமாயின் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, குடும்பத்தில் எவருக்கேனும் தொற்று உறுதிபடுத்தப்படும்பட்சத்தில், அது தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் அறிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“கர்ப்பிணிகளுக்கு, கொவிட்- 19 தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில், இன்று (10) அறிவிக்கப்படும்” என  மருந்து உற்பத்தி வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை துறை அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமனா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .