2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’கர்ப்பிணிகளின் உணவுப் பொதி விலையைக் குறைக்கவில்லை’

Editorial   / 2018 மே 23 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில், நாய்களுக்காக இறக்குமதி செய்ப்பட்ட உணவுகளின் விலைகள் குறைக்கப்பட்டதே ஒழிய, கர்ப்பிணிப் பெண்களின் உணவுப் பொதியின் விலையைக் குறைக்கவில்லை என குற்றம்சாட்டிய, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும்,  அவர்களே இன்று நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள ஒரு நாய் கூட வரவில்லை எனக்  கூறுவதாக குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில்,  நேற்று  (22) இடம்பெற்ற செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டமூலம், மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், "கடந்த ஆட்சிக்காலத்தில், மத்தளைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில், மக்கள் பிரதிநிதிகளை அவமானப்படுத்தினார்கள், துப்பாக்கியை காட்டிஎம்மை அச்சுறுத்தினதார்கள். வரலாற்றை மறந்து கதைக்க வேண்டாம்.

இந்த நாட்டில், முதலீடுகளை மேற்கொள்ள ஒருநாய் கூட வரவில்லைஎனக் கூறுகிறார்கள். நாயைப் பற்றி இவர்களுக்கு பேச அருகதை இல்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில், நாய்களுக்காக இறக்குமதி செய்ப்பட்ட உணவுகளின் விலைகள் குறைக்கப்பட்டதே ஒழிய, கர்ப்பிணிப் பெண்களின் உணவுப் பொதியின் விலையைக் குறைக்கவில்லை. இப்படிப்பட்டவர்கள், தற்போது ஒருநாய் கூட வரவில்லை எனக் கூறுகின்றனர்.

ஒன்றிணைந்த எதிரயினர்  தனது மேசையில் உள்ள அறிக்கைகளை பார்க்காது பேய், பிசாசுகளைப் போல கத்துகின்றனர். இவர்களால் நேரம்  வீணடிக்கப்படுகிறது." எனக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .