2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'குளிரூட்டப்பட்ட அறைகளில் தீர்மானம் எடுப்பதில்லை'

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியானது, இரண்டு - மூன்று பேர்களுடன் குளிரூட்டப்பட்ட அறைகளில்  இருந்துகொண்டு நாட்டு மக்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் கட்சியல்ல என்று அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு தீர்மானமும் கலந்துரையாடல்கள் மூலம் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் வழிமுறையை எந்நாளும் பின்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தமது கட்சியில் இனம் - மதம் உள்ளிட்ட வேறுபாடுகளுக்கு இடமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களுடன் நேற்று(10) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாகாண சபை தேர்தலுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க தற்போதிலிருந்து தயாராகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .