2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

கழிவு அகற்றல் பிரச்சினைக்கு அடுத்த ஆண்டு நிலையான தீர்வு

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள கழிவுகளை அகற்றுதல் தொடர்பான பிரச்சினைக்கு அடுத்த வருடத்தில் நிலையான தீர்வொன்றினை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்படுவதுடன், இவ்வருட இறுதிக்குள் 09 மாகாணங்களிலும் கழிவு முகாமைத்துவத்திற்கான உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி நிறைவுசெய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (15) முற்பகல் நடைபெற்ற உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை முறைமைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனையண்டிய பிரதேசங்களில் மாசடைந்துள்ள கால்வாய்த்தொகுதிகளை தூய்மைப்படுத்தி சிறந்தவாறு பேணுவதற்கான நீண்டகால செயற்திட்டங்களை தயாரித்தல் தொடர்பாகவும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X