2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘காணி தொடர்பான கொள்கையை மேம்படுத்த வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 20 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணி  தொடர்பான கொள்கையை விரைவில் மேம்படுத்த வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் வர்த்தகர்கள் நாட்டிலுள்ள நிலங்களை அழிப்பதற்கு இடமளிக்கப்படாதென்றும் காணிகளின் உரிமை பொதுமக்களுக்கே உரித்தாக வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

காணி தொடர்பான சட்டதிட்டங்களை ஏற்படுத்தும் போது,  எவ்விதத்திலும் உயர் வகுப்பினர் அல்லது வர்த்தகர்களை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாதென்றும் நாட்டில் அப்பாவி விவசாயிகளுக்கு காணிகளின் உரிமைகளை வழங்குவது அரசின் முக்கிய நோக்கம் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள காணிகளின் பாவனைத் தொடர்பில் சட்டங்கள் மேம்படுத்த வேண்டும் என்பதுடன் புதிய திருத்தத்தின் கீழ் குறித்த நிபந்தனைகளை அகற்ற முடியாதென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விஜேதாச ராஜபக்‌ஷ, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பீ. ஹரிசன், கயந்த கருணாதிலக, தயா கமகே உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .