2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காணிகளை அடாத்தாகப் பிடிக்கும் நடவடிக்கையை தடுக்கும் செயற்பாடு பலப்படுத்தப்படும்

Editorial   / 2017 நவம்பர் 23 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச காணிகளிலிருந்து வெளியேற்றுவதை முறைப்படுத்தல் மற்றும் அரச காணிகளை சட்டவிரோதமாகப் பிடித்துக்கொள்வதைத் தடுத்தல் ஆகியவற்றை மேலும் பலப்படுத்த, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அரச காணிகளில் இருந்து வெளியேற்றுவதை முறைப்படுத்தல் மற்றும் அரச காணிகளை சட்டவிரோதமாகப் பிடித்துக் கொள்வதைத் தடுப்பது தொடர்பிலான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுகளையும், ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர், மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரும் முன்வைத்த அம்சங்களை கவனத்திற்கொண்டு, அரச காணிகளிலிருந்து வெளியேற்றுவதை முறைப்படுத்தல் மற்றும் அரச காணிகளை சட்டவிரோதமாகப் பிடித்துக் கொள்வதைத் தடுப்பது ஆகியவற்றை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 

இது தொடர்பில், காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .