2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

காலநிலையால் பாதிக்கப்பட்டால் 117க்கு அழைக்கவும்

Editorial   / 2017 மே 25 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்படும் அவசர நிலைமைகளின் போது 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.  

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,  

அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக களனி, களு, கிங் கங்கைகளின் நீர் மட்டங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதன் காரணமாக குறித்த ஆற்றங்கரைகளுக்கு தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக செயற்படவும்.  

குறிப்பாக, களனி கங்கையின் க்ளேன் கோஸ் பிரதேசத்திலும், களு கங்கையின் இரத்தினபுரி பிரதேசத்திலும், கிங் கங்கையின் பத்தேகம பிரதேசத்திலும் நீர் மட்டங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும்.  

இந்த நிலையில், வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பிரதான பாதைகள் தொடர்பாக மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

மரங்கள் சரிந்து வீழ்தல், கற்பாறைகள் உருண்டு வீழ்தல், நிலம் வெடிப்பு, மண்சரிவுக்கான அறிகுறிகள் போன்றவை தென்பட்டால் அந்த பிரதேசங்களில் இருந்து விலகிச் செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .