2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கால் பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் உயர் அதிகாரி கைது?

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத்தில் இடம்பெற்ற 20 மில்லின் ரூபா நிதி மோசடி தொடர்பில், சம்மேளனத்தின் முன்னாள் நிதி முகாமையாளர் பிரபாத் குணவர்தன விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்படலாம் எனவும் நம்பத்தகுந்த வட்டடாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஊழல் தொடர்பில் பிரபாத் குணவர்தனவிற்கு தெரியும் என்பது பொலிஸார் முன்னெடுத்த ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்த தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஊழல் மோசடியில் குறித்த நிதி முகாமையாளர் சம்பந்தப்படுவதன் பின்னணியில் கால் பந்தாட்ட சம்மேளனத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பிலான பழைய ஒப்பந்தம் ஒன்றுடன் தொடர்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இந்த விசாரணைகளின்போது ஊழலில் ஈடுபட்ட மேலும் பல உயர் அதிகாரிகளின் பெயர்கள் வெளியாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .