2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிளி, முல்லையில் 2 ½ வருடங்களில் 5,442 ஆயுதங்கள், குண்டுகள் மீட்பு

Editorial   / 2018 ஜூலை 19 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொமேஸ் மதுசங்க

கடந்த 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் அண்டின் இதுவரையான காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக,பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பல்வேறு வகைகளைச் சேர்ந்த 5,442 குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகை ஆயுதங்கள் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளனவென தெரிவிக்கப்படுகிறது.

முடிவடைந்த 2 ½ வருட காலப்பகுதியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 532,391 மீற்றர் நிலப்பகுதிகள் துளையிடப்பட்டு இவ்வாறு ஆயுதங்கள் பல மீட்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் குண்டுகள் ,ஆர்.பீ.ஜீ, ஜோனி பட்டன், துப்பாக்கி ரவைகள் பல்வேறு வகை தற்கொலைக் குண்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன எனவும், பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இவ்வாறு விடுதலைப்பபுலிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலத்தடி குண்டுகளை மொத்தமாக அகற்றிவிட முடியும் என, நிலத்தடி குண்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் தெரிவித்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .