2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

குப்பைகளைக் கொண்டுசெல்லத் தடை வரும்

Kogilavani   / 2017 ஜூன் 28 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தர்ஷன சஞ்சீவ

மேல் மாகாணத்தில், கழிவகற்றல் சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்கு வாக்குறுதியளிக்கும் அதே நேரத்தில், பொதுமக்கள், குப்பைகளைக் கொண்டு செல்வதற்கும் அவற்றைக் கொட்டுவதற்கும் எதிராக, சட்டங்கள் இயற்றப்படும் என, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அவர், குப்பைகளை அகற்றுவது தொடர்பாகத் தேவைப்படும் ஊழியப் படையணி, இயந்திரத் தேவைகள் ஆகியவை பற்றிய அறிக்கையொன்றைத் தருமாறு, உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

"சம்பந்தப்பட்ட தகவல் கிடைத்ததும், தொழிலாளர்களை மேலும் பணிக்கமர்த்துவதோடு, புதிய இயந்திரங்களையும் கொள்வனது செய்வோம்" என்று தெரிவித்த அவர், குப்பைகளை அகற்றுவதற்குத் தேவையான உட்கட்டமைப்பும் ஏற்றுக் கொள்ளத்தக்க கழிவகற்றல் சேவையும் கொண்டுவரப்பட்ட பின்னர், குப்பைகளைக் கொண்டு செல்வதற்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்படும் என்றார்.

"குப்பைகளைக் கையாள்கின்ற அமைப்புகள் மாத்திரம், குப்பைகளைக் கொண்டு செல்வதற்கு அதிகாரமளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

கொழும்பின் பல மூலைகளில், குப்பைகள் குவிந்திருப்பது பற்றிக் கேட்கப்பட்டபோது, அந்த நிலைமை, முன்னேற்றமடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மீதொட்டமுல்லையில், உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் மாத்திரமன்றி, தனியாரும் குப்பைகளைக் கொட்டினர் என்று தெரிவித்த முதலமைச்சர், புதிய சட்டம், அதையும் தடை செய்யுமெனக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X