2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கூட்டத்தில் இலங்கை பங்கேற்கும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்கா - டேபனில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்து சமுத்திர கரையோர நாடுகள் சங்கத்தின் கூட்டத்தில் இலங்கை கலந்துகொள்ளவுள்ளதாக, வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.  

இது தொடர்பில், அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“ஆசியா, கிழக்கு ஆபிரிக்கா, ஓஸினியா பிரதேசங்களில் உள்ள 32 நாடுகளுடன் இலங்கை சர்வதேச வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை, ராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதே, இக்கூட்டத்தின் நோக்கமாகும்.  

“இந்து சமுத்திர நாடுகளின் உறுப்பு நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் உண்மையான நன்மைகளை இலங்கை கவனியாது விட்ட போதிலும், தற்போது இலங்கைக்கு வர்த்தகம், முதலீடு, சுற்றுலாத்துறை ஆகியவற்றில் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.  

“இந்து சமுத்திர கரையோர நாடுகளின் பிரதான கூட்டம், இம்மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகியது. 17ஆவது அமைச்சர்கள் பேரவைக் கூட்டம், நாளை (18) நடைபெறவுள்ளது.  

“32 அங்கத்துவ நாடுகளின் அமைச்சர்கள் இந்து சமுத்திர கரையோர நாடுகளின் பிரதான பிரச்சினையான கடல் பாதுகாப்புப் பற்றிப் பேசப்படவுள்ளன. ஏனைய பாதுகாப்பான இந்து சமுத்திர பொருட்கள், மக்களின் அசைவுருக்கு ஊக்கியாக அமையும்.  

“இதன்போது, அங்கத்துவ நாடுகளிடையே வர்த்கம், முதலீடு என்பவை பற்றி கருத்துப் பரிமாற்றங்களும் நடைபெறும். இதன் மூலம் தொழில் வாய்ப்பு உருவாக்கம், வறுமை குறைப்பு, பொருளாதார அபிவிருத்தி என்பன ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

“இந்த கரையோர நாடுகள் இந்தப் பிராந்தியத்தின் மீன் வளங்களை பாதுகாப்பதிலும் மிகுந்த அக்கறையாக உள்ளன. கடல் பொருளாதாரத்தின் அபிவிருத்தி இந்து சமுத்திர பிராந்தியத்துக்கு பெரிய வாய்ப்புகளை வழங்க வல்லதாக உள்ளது. மேலும், அனர்த்த முகாமைத்துவமும் இந்த நாடுகளின் அக்கறைக்கு உரியதாகின்றன” எனவும் தெரிவித்தார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .