2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கெப்ரா விவகாரத்தை தீர்க்க இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை

Editorial   / 2017 டிசெம்பர் 18 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், ஆர்.​ரமேஸ்   
“ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட தேயிலைப் பொதியில் “கெப்ரா” என்ற வண்டு ஒன்று இனங்காணப்பட்டமையால் எமது தேயிலை இறக்குமதியை, ரஷ்யா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது” என்று தெரிவித்த அமைச்சர் நவீன் திஸாநாயக்க, அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

நுவரெலியா அரலிய ஹொட்டலில் நேற்று (17) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“எமது நாட்டுத் தேயிலைத் தூளுக்கு தடைவிதிக்க தீர்மானித்திருப்பது அசாதாரணமான ஒன்றாகும். உண்மையில் அந்த வண்டு நாம் அனுப்பிய தேயிலையில், அல்லாமல் பொதிகளின் மூலமாக சென்றிருக்கலாம் என அரசாங்கம் எண்ணுகின்றது. தேயிலைச் சபையும் எண்ணுகிறது. அத்துடன், குறித்த கப்பல் வேறு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது, இந்த வண்டு சென்றிருக்கலாம் என நம்புகின்றோம்.  

“எனினும், இந்தப் பிரச்சினையைத் விரைவில் தீர்த்து, விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடையை அகற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .