2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

Editorial   / 2018 ஒக்டோபர் 13 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வழங்கிய வாக்குறுதி மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் வாக்குறுதியை அடுத்து, அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (13) தற்காலிகமாக  கைவிட்டுள்ளனர்.

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளை, இன்று சிவில் சமூக பிரதிநிதிகள் சந்தித்தனர்.

குறித்த சந்திப்பின் பின்னர், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது,

“உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தோம். அதன்போது அவர்கள் காலையில் தம்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிவமோகன் ஆகியோர் சந்தித்ததாகத் தெரிவித்தனர்.

“இதன்போது நாம் அவர்களிடம் எம்மை தரம் பிரிக்காது விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவ்வாறு முடியாவிடின் சிறிது கால புனர்வாழ்வு அளித்து விடுவிக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்ததாகவும் கைதிகள் தெரிவித்தனர். அதனை அடுத்து, தாம் ஜனாதிபதியுடன் மீண்டுமொரு சந்திப்பை மேற்கொள்ளவுள்ளவுள்ளதாக, கைதிகளிடம் தெரிவித்தோம்.

“இச்சந்திப்பின் போது, கைதிகளின் கோரிக்கையை முன்வைப்பதாகவும் அதன்போது எமக்கு  சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகிறோமெனவும் கைதிகளிடம் தெரிவித்தோம்.

“அத்துடன், கைதிகளின் விடுதலைக்காக தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதுடன், பாதீட்டையும் எதிர்ப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உறுதியளித்திருந்தார்.

“இதேவேளை, நாமும் உங்கள் போராட்டத்தை கைவிடுங்கள். நாம் உங்களுக்காக போராடுகிறோம் என கைதிகளிடம் உறுதியளித்தோம் .

“அதனை ஏற்றுக்கொண்ட கைதிகள், தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதி மொழியையும் நம்பி எமது போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாகத் தெரிவித்தனர்.

“இதேவேளை, எமது விடுதலை தொடர்பில் சாத்தியமான முடிவெடுக்க வேண்டும். விடுதலையை சாத்தியமாக்காவிடின் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்போம் என, அரசியல் கைதிகள் தம்மிடம் தெரிவித்தனர்” என அருட்தந்தை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .