2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கொக்கெய்னுக்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை’

Yuganthini   / 2017 ஜூலை 25 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இரத்மலானை, பொருளாதார மத்திய நிலையத்தில், சீனிக் கொள்கலனிலிருந்து மீட்கப்பட்ட 218 கிலோ 600 கிராம் நிறையுடைய கொக்கெய்ன், சதொச நிறுவனத்துக்குக் கொண்டுவரப்பட்டமைக்கும் எமக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என, கைத்தொழி வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நேற்று (24) தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “விலைமனுக் கோரலின் அடிப்படையிலேயே சதொச நிறுவனத்துக்கு ஒவ்வொரு வாரமும் சீனி கொள்வனவு செய்யப்படுகிறது. 

அந்த வகையில்,  ரஞ்சிதா பிரைவைட் லிமிட்டட் நிறுவனத்திடமிருந்து கடந்த 19ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட 500 மெற்றிக் தொன் சீனியை, இரத்மலானை சதொச ஊழியர்கள் ஏற்றிக்கொண்டு இருந்துள்ளனர்.

இதன்போதே, கொக்கெய்னைக் கண்ட அவர்கள், இவ்விடயம் தொடர்பில் சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோனுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, அவரின் பணிப்பின் பேரில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.  

இந்தச் சீனி வில்பத்துவிலிருந்து சதொச நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என, ஆனந்த சாகர தேரர் பொய்யான வதந்திகளைப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்” என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X