2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலையின் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு

Editorial   / 2018 மே 20 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 11ஆவது சர்வதேச ஆராய்ச்சி மாநாடு, "இணைவுகளூடாக தொழில்சார் மகிமையைப் பேணுதல்" என்ற தொனிப்பொருளில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம், 13, 14ஆம் திகதிகளில், இரத்மலானையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கல்விசார் ஊழியர்கள் மற்றும் தொழில்வல்லுநர்களுக்கு, தமது ஆராய்ச்சி முடிவுகளைக் கலந்துரையாடுவதற்கு, இது நல்லதொரு சந்தர்ப்பமாகும்.

இந்த மாநாட்டுக்கு பாதுகாப்பும் மூலோபாயமும், பொறியியல், மருத்துவம், சட்டம், முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம், மனிதயியல் போன்ற பல்துறைசார் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். முப்படை மற்றும் பொலிஸ் திணைக்கள அலுவலர்கள், தமது ஆராய்ச்சி முடிவுகளை முன்வைக்கவுள்ளனர்.

செப்டெம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ள இம்மாநாட்டின் தொடக்க விழாவுக்கு, பேராசிரியர் மொஹான் முனசிங்க, கலாநிதி சரத் குணபால ஆகிய இருவரும் பிரதம உரை நிகழ்த்தவுள்ளனர்.

பேராசிரியர் மொஹான் முனசிங்க, 2007ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நொபெல் பரிசை வென்றவராவார். மேலும் அவர், தனது ஆராய்ச்சிகளுக்கும் அவற்றின் பிரயோகங்களுக்கும், பல சர்வதேச பரிசில்களையும் பதக்கங்களையும் வென்றவராவார், கலாநிதி சரத் குணபால, நாசாவில் உள்ள விமான உந்துவிசை ஆய்வுகூடத்தில், அகச்சிவப்பு உந்துவியல் குழுமத்தைத் தலைமை தாங்குபவராகும். இவர் நாசாவின் திறமையான தலைமைத்துவப் பதக்கத்தை 2014ஆம் ஆண்டில் வென்றதோடு, பல ஆராய்ச்சிகளைப் பிரசுரித்துள்ளார்.

முழுமை அமர்வு, தொழல்நுட்ப அமர்வு, சுவரொட்டிப் பிரசுரிப்பு போன்ற பகுதிகளைக் கொண்டதாக இம்மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரைகள்/ நீடிக்கப்பட்ட சுருக்கங்களை அனுப்புவதற்கான காலஎல்லை, மே 31 2018 ஆகும். www.kdu.ac.lk/irc2018 எனும் இணையத்தளத்தினூடாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .