2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொரோனா சந்தேகநபர்களுக்காக ’Mankiwwa’ செயலி அறிமுகம்

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

'Mankiwwa' என்ற செயலியைப் பயன்படுத்தி கொரோனா தொற்றாளர்கள் எனச் சந்தேகிப்பவர்கள் குறித்து அறிவிக்க முடியுமென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.;

தற்போது கம்பஹா, குளியாப்பிட்டிய ஆகிய வைத்தியசாலைகளுடன் இந்த செயலி இணைக்கப்பட்டுள்ளதுடன், குறுகிய கால இடைவெளியில் நாடுபூராகவுமுள்ள வைத்தியசாலைகளுடனும் இந்த செயலி இணைக்கப்படவுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கொரோனா தொற்றாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் சமூகத்தில் மறைந்து வாழ்வார்களாயின், இவ்வாறான நபர்கள் குறித்து சுகாதாரப் பிரிவினரை தெளிவுப்படுத்தவும் அவர்கள் குறித்து சுகாதார பிரிவினருக்கு அறிவிப்பதற்காகவும் பல தொலைபேசி இலக்கங்களை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், தற்போது இதற்காக புதிய செயலி ஒன்றையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .