2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொரோனாவிலிருந்து தப்பிக்க மூன்று வழிமுறைகள் பரிந்துரை

Niroshini   / 2021 மே 06 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரிபுபட்ட புதிய வகை கொரோனா வைரஸ் மற்றும் அது தொடர்பான அதிக அவதான நிலைமை தொடர்பில், சுகாதார மேம்பாட்டு அதிகார சபையினால் விசேட அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.

காலத்துக்கு ஏற்றவகையில், கொரோனா வைரஸானது, தன்மை மாற்றியமைத்துக் கொள்கிறது என்றும் ஒரு புரதத்தால்கூட, அதன் நடத்தையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் எடுத்துரைத்துள்ளது.

இவ்வாறான மாற்றத்தால், ​வைர​ஸ் தொற்றின் வேகம் அதிகரிக்கக்கூடுமென்றும் தெரிவித்துள்ள அச்சபை, நோய் நிலைமையும் ஆபத்தானதாக இருக்குமென்று அறிவித்துள்ளது.

தற்போது நாட்டுக்குள் காணக்கூடியதாகவுள்ள கொரோனா வைரஸுக்குள், B.1.1.7  உள்ளிட்ட திரிபடைந்த நிலையிலான புதிய வைரஸ்கள் கண்டறியப்பட்டு வருகின்றன என்றும் அதனால், அவை பரவும் வேகம் அதிகமாகக் காணப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின் பிரகாரம், கொரோனா வைரஸானது, மிக வேகமாகப் பரவலடைவதற்கான மூன்று காரணிகள் கண்டறியப்பட்டுள்ளன.இலங்கையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள வைரஸிலும், அந்த மூன்று காரணிகள் தொடர்புபட்டுள்ளன. வைரஸ் எவ்வாறானதாக இருப்பினும், அவை கண்டறியப்பட்ட இடங்கள் தொடர்பில் அறிந்து, அவற்றைப் புறக்கணிப்பதே புத்திசாலித்தனம் என்றும், சுகாதார மேம்பாட்டு அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில்,

01. அதிக மக்கள் நடமாட்டம் காணப்படும் பகுதிகள்: குறிப்பிட்ட ஒரு இடத்தில் நடமாடும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டால், தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

02. ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருக்கும் இடங்கள்: விசேடமாக, ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக இருக்கும் இடங்கள், பேசும் இடங்கள் மற்றும் உணவு உட்கொள்ளும். இடங்களிலிருந்தும் தொற்றுப் பரவல் அதிகரிக்கும்.

03. நன்று காற்றோட்டம் இல்லாத மூடப்பட்ட இடங்கள்: மூடப்பட்டுள்ள இடங்களில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும். ​அனைத்துப் பக்கங்களாலும் மூடப்பட்டு, சிறந்த காற்றோட்டம் காணப்படாத இடங்கள் தொடர்பில், அதிக அவதானமாக இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட மிகப் பிரதான காரணிகளால், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகமாகக் காணப்படும் என்று தெரிவித்துள்ள அதிகார சபை, அவ்வாறான இடங்களில் நடமாடுவ​தைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .