2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’கொழும்பில் பணியாற்றுவோரே தொற்றுக்கு இலக்காகின்றனர்’

Niroshini   / 2021 மே 06 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து ​தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களில் பெரும்பாலானோர், கொழும்பு நகரில் ​பணியாற்றுபவர்களாகவே உள்ளனர் என்றும் தவிர, கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் அல்லர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கொழும்பு மாநகர சபையின் தொற்று நோயியல் பிரிவு பிரதம அதிகாரி டொக்டர் தினூகா குருகே, “கொழும்பு நகரிலிருந்து ​கண்டறியப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை, 4 சதவீதமாகக் காணப்படுகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை, திடீரென கொழும்பில் அதிகரிக்கப்பட்ட போதிலும், அதற்கெதிரான தடுப்பூசி காரணமாக, தொற்றுப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் குறிப்பிட்ட அவர், ஆனால் இம்முறை, கொழும்பிலிருந்து தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்கள், கொழும்பில் பணியாற்றுபவர்களே தவிர, கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் அல்லர் என்றார்.

கொழும்பில் காணப்படும் நிறுவனங்களில், சிறு சிறு கொத்தணிகள் உருவாகியுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ள டொக்டர், மிகவும் பொறுப்புணர்வுடன் செயற்படுவதால் தான், கொழும்பை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .