2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கொவிட் 19 நிதியத்துக்கு 66 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 07 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரண்டு நாள்களில் கொவிட் 19 சுகாதார, சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 66 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

314 மில்லியன் ரூபாவாக இருந்த மீதி தற்போது 380 மில்லியனாக அதிகரித்துள்ளது.
அமைச்சர் டலஸ் அழகப்பெரும தனது அமைச்சுப் பதவிக்கு உரித்தான ஏப்ரல் மாத சம்பளத்தையும் அமைச்சர் காமினி லொக்குகே 10 மில்லியன் ரூபாயையும் நேற்று (06) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் அன்பளிப்பு செயதுள்ளனர்.

தேசிய லொத்தர சபை 25 மில்லியன் ரூபாயையும், தேசிய சேமிப்பு வங்கி மற்றும் இலங்கை மின்சார சபை பொறியியல் சங்கம் ஆகியன தலா 2.5 மில்லியன் ரூபாயையும்  காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு 02 மில்லியன் ரூபாயையும்  மெலிபன் பிஸ்கட் மெனுபெக்சரீஸ் நிறுவனம் 10 மில்லியன் ரூபாயையும்  மாத்தறை பௌத்த பாதுகாப்பு சபை ஒரு மில்லியன் ரூபாயையும் நேசர்ஸ் பியுட்டி கிரியேசன்ஸ் நிறுவனம் 5 மில்லியன் ரூபாயையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்துக்கு உள்நாட்டு வெளிநாட்டவர்களால் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும்.

சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்துக்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X