2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கோப் உறுப்பினர்களுக்கு அலோசியஸுடன் தொடர்பு

Editorial   / 2017 நவம்பர் 17 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப் குழுவின் 5 உறுப்பினர்கள், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மருமகனும் சர்ச்சைக்குரிய பேர்பெச்சுவல் ட்ரெஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான அர்ஜுன் அலோசியஸுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளமை தொடர்பில், பிணைமுறி ஆணைக்குழுவுக்கு நேற்று (16) தகவல்கள் கிடைத்துள்ளன.

அத்துடன், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அவருடைய குடும்பத்தாருடன், அர்ஜுன் அலோசியஸ், 476 தடவைகள் தொலைபேசி மூலம் தொடர்புகளைப் பேணியுள்ளார் என்றும். ஆணைக்குழுவுக்கு நேற்று அம்பலமாகியது.

குறித்த தொலைபேசி உரையாடல் தொடர்பான அறிக்கையானது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால், பிணைமுறிகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது.

இதற்கமைய, அமைச்சர் தயாசிறி ஜயசேகர 2 தடவைகளும், இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க 62 தடவைகளும், பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா 2 தடவைகளும், ஹெக்டர் ஹப்புஹாமி 23 தடவைகளும், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸன ராஜகருணா 23 தடவைகளும், அர்ஜுன் அலோசியஸுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளமை அம்பலமாகியுள்ளது.

அந்த வகையில், பிணைமுறி மோசடி தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட கோப் குழுவில் 28 பேர் அடங்குகின்றனர். இவர்களில் ஐந்து பேர், அர்ஜுன் அலோசியஸுடன் தொடர்புகளைப் பேணியுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .