2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கோராவை தொடர்ந்து உயிரிழந்த டொலி

Editorial   / 2018 ஜூலை 22 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தில் விசேட பொலிஸ் பிரிவில், வெடி மருந்து பொருட்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வந்த, ‘ டொலி’  என்ற நாய் இருதய நோயினால் நேற்று (21)  உயிரிழந்துள்ளது.

நெதர்லாந்து நாட்டில், 31.10. 2010  திகதியன்று பிறந்த இந்த நாயானது,  2011ஆம் ஆண்டு இலங்கை கண்டி பொலிஸ் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டு, 2011.09.27 ஆம் திகதி முதல் 86802 என்ற பொலிஸ் இலக்கமுடைய ,பொலிஸ் கான்ஸ்டபிள் தர்ஷன் என்பவரால் வெடி மருந்து பொருட்கள் தேடும் நடவடிக்கையில், பத்து மாத காலம்  விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டு, 2012.10.30 ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மட்டக்களப்பு விசேட பொலிஸ் பிரிவில், வெடி மருந்து பொருட்கள் தேடும் பணியில் 7 வருடங்கள்  ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தப் பொலிஸார்,  இந்த 7 வருட கால பகுதியில் நாட்டின் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் விசேட அரச தலைவர்கள்ஆகியோர்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு   வருகைதரும் போது, விசேட பாதுகாப்பு நடவடிக்கையில் வெடி மருந்து பொருட்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அத்துடன் 2013  மற்றும்  2014 ஆம்  ஆண்டு காலப்பகுதியில்  200க்கு  மேற்பட்ட வெடி மருந்து பொருட்கள் தேடும் விசேட பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தனர்.

இருதய நோயால் உயிரிழந்த டொலியின் இறுதி கிரியைகள்  மத அனுஸ்டானங்களுடனும் , பொலிஸ் மரியாதையுடனும் நேற்று மாலை,  மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக விடுதி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .