2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சகல துறைகளும் சரிவடைந்துள்ளன’

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்நாட்டின் சகல துறைகளும், தற்போது சரிவடைந்துள்ளன -வெனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), நாட்டை ஆட்சி செய்த, ஆட்சி செய்கின்ற கட்சிகளிடம், உரிய கொள்கையொன்று காணப்படாமையே இந்த நிலைமைக்குக் காரணமென்றும் தெரிவித்துள்ளது.  

நுவரெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த, ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, பொதுமக்கள் அளிக்கும் வாக்குகளால், கொள்ளையர்கள் கூட்​டமே அரசாங்கங்களை அமைத்துக்கொள்வதாகக் குற்றஞ்சாட்டினார்.  

காலத்துக்குக் காலம், கொள்ளையர்கள் கூட்டமே, நாட்டை ஆட்சி செய்வதாகவும் மக்கள் வரியைச் செலுத்தும் பணியைச் சரிவர செய்துகொண்டிருக்கும் போது, மறுபுறத்தில், அந்த வரிப்பணம் கொள்ளையிடப்ப -டுவதாகவும், டில்வின் சில்வா குறிப்பிட்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .