2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’சங்காவும் மஹேலவும் தப்பினர், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களின் கைகளில்’

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சிரேஷ்ட வீரர்களான ரொஷான் மஹனாம, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரை, ஆலோசகர்களாக இணைந்து கொள்ளுமாறு கிரிக்கெட் சபை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தமையானது வரவேற்கத்தக்க விடயம் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய வளத்துறை அபவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் "சூதாட்டகாரர்கள் மற்றும் வியாபாரிகளின் கைகளில் அகப்படாமல் புத்திசாலித்தனமாக செயற்பட்ட சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களுக்கு நான் நன்றியை தெரிவிக்கின்றேன். சூதாடக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் தமது தேவைகளை பூர்த்திசெய்யவே வீரர்களை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு இடம்பெறாமல் இருக்கவும் கிரிகெட்டை பாதுகாக்கவும் சரியான வழிமுறையை பயன்படுத்த வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சரிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்." என அவர் குறிப்பிட்டார்.

மேலும், "இன்று கிரிக்கெட் நிர்வாக சபையில் உள்ள வியாபாரிகள் எமது சிரேஷ்ட வீரர்களின் பெயரைப் பயன்படுத்தி நிரந்தரமாக பதவியில் இருப்பதற்கு முயற்சிக்கின்றனர். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜயாசிரி ஜயசேகரவும் ஒரு குழுவொன்றை நியமித்தார். ஆனால் ஒன்றுமே இடம்பெறவில்லை. தற்போதும் சிரேஷ்ட வீரர்களின் பெயர்களை முன்நிலைப்படுத்தி அவர்களின் பெயர்களை விற்க முயச்சிக்கின்றனர். இங்கு என்ன செய்யப் போகிறார்கள்? இது காலத்தை வீணாக்கும் செயலாகும்." எனவும் அவர் வலியுறுத்தினார்.

"அனைவரும் ஒன்றினைந்து கிரிக்கெட்டை கீழ்நிலைக்கு கொண்டு சென்றவர்களை கிரிக்கெட் சபைக்குள் வரவிடாமல் தடுக்கவேண்டும். அதற்கான காலமும் வந்துவிட்டது." எனவும் அவர் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .