2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சஜித் - ரவி கருத்து மோதல்

Editorial   / 2019 ஏப்ரல் 18 , பி.ப. 01:07 - 1     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் உப தலைவர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையிலான கருத்து மோதல் வலுப்பெற்றுள்ளது.

இவர்கள் இருவரும், ஊடகங்கள் முன்னிலையில், பகிரங்கரமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலை அதிகரித்துள்ளது.

அவ்வாறாக, கடந்த சில தினங்களில், அவ்விருவரும் தெரிவித்துக்கொண்ட கருத்துகள் பின்வருமாறு,

15.04.2019 ரவி கருணாநாயக்க:

“ஐ.தே.கவில் இப்போது, ஒரேயொரு தலைவர் மாத்திரம் தான் உள்ளார். அவர், ரணில் விக்கிரமசிங்கவே ஆவார். அதை ஒருபோதும் மாற்ற மாட்டோம். இந்தத் தலைமைத்துவத்தை, எமது கட்சியால் மாத்திரமே மாற்ற முடியுமே தவிர, எமது கட்சியின் பெ​யரை வைத்துக்கொண்டு ஓடுபவர்களால் முடியாது.

“எமது கட்சிக்கென்றே கொள்கைகள் உள்ளன. இதை, அம்மா, அப்பாவின் பெயர்களை விற்று, முன்னால் கொண்டுசெல்ல முடியாது. தங்களுடைய​ தொகுதியைக் கூட வெல்லமுடியாத சிலர், நாட்டை வெல்ல முயற்சிக்கின்றனர்.

“சிலர், அவ்வாறான பிரதிவிம்பங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றனர். பலவீனங்களுக்காக நாங்கள் அமைதியாக இருக்கவில்லை. ஒற்றுமையை ஏற்படுத்தவே அமைதியாக இருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.  

16.04.2019 சஜித் பிரேமதாச:

“தான் யாரென்பது, பிறப்பினூடாகத் தீர்மானிக்கப்படுவது இல்லை. தம்முடைய செயற்பாட்டினூடாகவே, ஒருவரை அளவிட முடியும். யார் யாரோ, என்ன என்னவோ பேசுகிறார்கள்.

“அம்மா, அப்பாவைப் பற்றிய கதைகள் சில அடிபடுகின்றன. மற்றையவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் தான், நாட்டுக்குள் மோசமான விடயங்களை முன்னெடுக்கிறார்கள். அவர்கள் செல்லுமிடமெல்லாம் நாசம். பொறுப்பை ஏற்றால், அதுவும் அவ்வளவுதான்.

“மக்கள், பிரகாசத்தை எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், இருளே அவர்களுக்குக் கிடைக்கிறது. வங்கிகளில் கொள்ளையிட்டு, உத்தமராக முடியாது. மன்னுடைய மனைவியினூடாக இலஞ்சம் பெறுவது, உத்தமர் காரியமல்ல” என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 1

  • S.P.Jesuthasan Saturday, 20 April 2019 12:33 PM

    “தான் யாரென்பது, பிறப்பினூடாகத் தீர்மானிக்கப்படுவது இல்லை. தம்முடைய செயற்பாட்டினூடாகவே, ஒருவரை அளவிட முடியும். மக்கள், பிரகாசத்தை எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், இருளே அவர்களுக்குக் கிடைக்கிறது. வங்கிகளில் கொள்ளையிட்டு, உத்தமராக முடியாது. தன்னுடைய மனைவியினூடாக இலஞ்சம் பெறுவது, உத்தமர் காரியமல்ல”.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .