2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘சட்ட விதிமுறைக்கேற்ப வைத்தியர்கள் செயற்பட வேண்டும்’

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பொலிஸ் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், பொலிஸ் திணைக்களத்தின் சட்ட விதிமுறைகளுக்கேற்ப செயற்பட வேண்டும்” என்று, விசேட பொலிஸ் அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி   எம்.ஆர்.லாதீப் தெரிவித்தார்.

 

இதற்கு பதிலளிக்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,

பொலிஸ் வைத்தியசாலையில் இருக்கும் எம்முடைய சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் உள்ளனர் என, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வை்ததியர் நளின்த ஹேரத் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

“நேற்று (21) சைட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, காயமடைந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் என 5 பேர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அங்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தினால், அவர்கள் பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்” என்றார்.

மேலும், “குறித்த வைத்தயர்கள் அனைவருக்கும் பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பொலிஸ் திணைக்களத்தின் சட்ட விதிமுறைகளுக்கேற்ப செயற்பட வேண்டும்” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .