2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

’சட்டம், ஒழுங்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்’

Editorial   / 2018 ஜூலை 21 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடமாகாண சபைக்கு, சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்று தெரிவித்துள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறு்பபினருமான எம்.சுமந்திரன். வடக்கில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட, இதுவே வழி என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர், வடக்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பின்னரும்கூட, யாழில் வன்முறைகள் தொடர்கின்றமை தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், வன்முறைகளை கட்டுப்படுத்த வேண்டுமாயின் இந்த பிரதேசத்தில் பேசப்படுகின்ற மொழியை தங்களது தாய்மொழியாகக் கொண்டவர்கள் இங்கே பொலிஸ் கடமையில் ஈடுபட வேண்டும். இல்லாவிடில் வன்முறைகளை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான விடயமாக அமையும்.

“ஆனால், இந்த நடைமுறைகள் ஏற்படுத்தப்படும் வரை வடக்கில் தொடரும் வன்முறைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, மத்திய அரசாங்கம் விரைந்து இது தொடர்பாக உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்” என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .