2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோர் அடைபட்டனர்

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வசந்த சந்திரபால

 

அம்பாறை - ஒலுவில் பல்கலைக்கழகத் தொழில்நுட்ப பீட மாணவர்களின் பெற்றோரால், குறித்த பீடத்தைத் திறக்குமாறு வலியுறுத்தி, பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்துக்குள், சத்தியாக்கிரகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதன் நிர்வாகத்தினரால், மேற்படி கட்டடத்தின் கதவுகள், மலசலகூடங்கள் மூடப்பட்டு, பூட்டிடப்பட்டுள்ளனவெனத் தெரிவிக்கப்படுகின்றது.  

 

குறித்த பல்கலைக்கழகத்துக்குள் நிலவும் பிரச்சினைகள் பற்றிப் பேசித் தீர்வு காண்பதற்காக,மாணவர்களும் ​அவர்களது பெற்றோரும், நேற்று முன்தினம் (13) சென்றிருந்த நிலையில், இரவு 11 மணிவரை, பீடாதிபதியுடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என்றும் நள்ளிரவு 12 மணியளவில், அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது, வகுப்புத் தடைக்கு இலக்காகியிருந்த மாணவர்களுக்கான தடையை நீக்கிக்கொள்ள இணக்கம் காணப்பட்டது.  

இருப்பினும், பல்கலைக்கழகத்திலிருந்து நீக்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தை நீக்க, துணைவேந்தர் இணங்காத நிலையில், பெற்றோரின் தொடர் வாக்குவாதத்தை அடுத்து, அந்தத் தீர்மானமும் தளர்த்தப்பட்டது. இருப்பினும், இது தொடர்பான முடிவை, எழுத்துமூலமாக வழங்குமாறு பெற்றோர் வலியுறுத்தியதை அடுத்து, அதற்கான எழுத்துமூலக் கடிதம், ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. ]

இருப்பினும், அந்தக் கடிதத்தை சிங்களத்தில் வழங்குமாறு பெற்றோர் வலியுறுத்​தியதை அடுத்து, அங்கிருந்த துணைவேந்தரும் அதிகாரிகளும், பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிச் சென்றனர்.  

இருப்பினும், இப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் வரையில், குறித்த கட்டடத்தை விட்டு வெளியேறப்போவதில்லை எனத் தெரிவித்த பெற்றோர், அங்கேயே நிலைகொண்டதால், அவர்களை உள்ளே வைத்து கதவுகளை மூடி பூட்டிட்ட நிர்வாகத்தினர், மலசலகூடக் கதவுகளையும் இழுத்துப் பூட்டிவிட்டுச் சென்றதாக, அங்கிருக்கும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .