2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’சமாதானத்தை உறுதிப்படுத்துக’

Editorial   / 2019 மே 18 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் நிலைநாட்டுமாறு சுவிஸ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுவிஸ் வெளியுறவு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள், சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என்றும் அண்மைக்காலமாக இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்தும் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இத்த் தாக்குதல்களுக்கான காரணங்களை, இன்றும் இலங்கையின் அரசாங்கங்கள் நிவர்த்தி செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையில், எனவே, இலங்கையின் சமாதானத்துக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்க, சுவிஸ் அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X