2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சாட்சியப்பதிவுக்கு திகதி குறிப்பு

Thipaan   / 2017 செப்டெம்பர் 27 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரண குணவர்த்னவுக்கு எதிரான வழக்கின் சாட்சியப் பதிவுக்கான தினங்களாக, நவம்பர் 14,21,22 மற்றும் 28ஆம் திகதிகளை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று (26) குறித்தது. 

சரண குணவர்த்ன எம்.பி, தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில், அந்த சபைக்கு வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், ஒன்பது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவால், 2016ஆம் ஆண்டு, தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகள், கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

கடந்த அமர்வின் போது, சரண குணவர்தன எம்.பி, மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. அவர், வேறொரு வழக்குக்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என, நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் (26) அவரை மன்றில் ஆஜர்படுத்துமாறு, வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு, நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

2008ஆம் ஆண்டு, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராகப் பதவி வகித்த போது, அரசுக்குச் சொந்தமான 8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு ஜீப்பை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், கொழும்பு குற்றப் பிரிவினரால், இம்மாதம் 4ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தால், ஒக்டோபர் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .