2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சாதாரணத் தர பரீட்சை மதிப்பீட்டு பணிகள் 23ஆம் திகதி ஆரம்பம்

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த மாதம் 3ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதி வரை நடைபெற்று முடிந்த கல்வி பொதுத் தராதர சாதாரத்தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 23ஆம்  திகதி ஆரம்பமாகுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளத

வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இதன் முதலாவது கட்டம் எதிர்வரும் 23ஆம் திகதியிலிருந்து ஜனவரி மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 8ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாடுபூராகவும் 107 பாடசாலைகளில் முதற்கட்ட மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நடவடிக்கை 18,19,20 மற்றும் 21ஆம் திகதிகளில் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

குறித்த பரீட்சைகள் குறித்து இதுவரை 6 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம்  முறைபாடுகள் குறைவாகக் கிடைத்துள்ளனவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்றுள்ள முறைபாடுகளுக்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .