2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘சி.விக்கு அதிகாரமில்லை’

Editorial   / 2018 ஜூலை 16 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச பாதுகாப்புக்காக, இராணுவத்தை ஈடுபடுத்தும் முழுமையான அதிகாரம், அரசமைப்புக்கமைய, ஜனாதிபதிக்கு உள்ளதாக, அமைச்சர் கலாநிதி சரத் அமுனுக தெரிவித்தார்.

 அதற்கமைய இராணுவம் அல்லது அரச அதிகாரிகள் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ளும் அதிகாரம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இல்லை என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

கண்டியில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்புக்கு அமைவாக, பாதுகாப்புப் பிரிவானது, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்துக்கு உட்பட்டதாகும் என்றும் இந்த விடயம், அரசமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது எனவும், அமைச்சர் அமுனுகம கூறினார். 

அத்துடன், அரசமைப்புத் திருத்தம் தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு, அ​ரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாகும் என்றும், அவர் தெரிவித்தார். 

இதேவேளை, அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் வரை, கூட்டு அரசாங்கத்தின் ஆட்சியே தொடருமெனவும் அமைச்சர் கூறினார். 

 மேலும், தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைக்கு அமைய, எந்த ஒரு கட்சியாலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறமுடியாது எனவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .