2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘சி.வியை கொண்டு வரும்போது எதிர்த்தேன்’

Editorial   / 2018 ஜனவரி 22 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வ.திவாகரன்  
“வடக்கு முதல்வராக தற்போது இருக்கின்ற சி.வி.விக்னேஸ்வரன் ஐயாவை அரசியலுக்கு, கொண்டுவரும்போது, அதனை நான் மட்டுமே எதிர்த்தேன். எனது எதிர்ப்பை அன்று பிழையென்றவர்கள். உள்ளிட்ட சகலரும் இப்போது சரியென்கின்றனர்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்காக மகிழடித்தீவு வட்டாரத்தில் போட்டியிடும் ஹேமச்சந்திரனின் அலுவலக திறப்பு நிகழ்வும், தேர்தல் பரப்புரையும் நேற்று (21) இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   

“சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தமது தேர்தல் விளம்பரங்களில், ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒவ்வொருவரது முகத்தை காட்டுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு இடத்துக்கும் வெவ்​வேறான முகங்களைக் காட்டிக்கொண்டு மாற்றுத்தலைமை வேண்டுமென கூறிக்கொண்டிருக்கின்றனர்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும், தமிழரசு கட்சியை தோற்கடிக்க வேண்டும், சம்பந்தனை தோற்கடிக்க வேண்டும், மாற்றுத்தலைமையை உருவாக்க வேண்டுமென்று கூறுகின்றனரே தவிர, மாற்றுத்தலைவர் யார் என்பதைக் கூறவில்லை.  

“அவ்வாறானவர்கள் தலைவர் என்று கூறுகின்ற வடக்கு முதலமைச்சருக்கு, அவர் எந்த கட்சியென்றே தெரியாது. தான் எங்கு நின்று கதைக்கின்றார் என்றே தெரியாது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .