2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சித்தியடையாத மாணவர்களுக்கு புதிய இரு பாடத்திட்டங்கள் அறிமுகம்

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத  மாணவர்கள், உயர்தரக் கல்வியை தொடருவதற்காக புதிய இரண்டு பாடத்திட்டங்களை அடுத்த மாதத்திலிருந்து  அறிமுகப்படுத்த இருப்பதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த பாடத்திட்டத்தில், உளவியல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, விளையாட்டு, உடற்கல்வி மற்றும் கிராஃபிக் வடிவமைப்பு, ஃபேஷன் வடிவமைப்பு, கட்டுமான தொழில்நுட்ப ஆய்வு,    நீர் வளங்கள் தொழில்நுட்ப ஆய்வு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படயிருப்பதாக தெரிவித்துள்ளது.

13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி என்ற வேலைத் திட்டத்தின் கீழ் இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதுடன்,  தற்போது இருக்கும் உயர்தரப் பாடத்திட்டங்களுக்கு மேலாக, பொது பாடத்திட்டம் மற்றும் பிரயோக பாடத்திட்டங்கள் என்ற முக்கிய பிரிவுகள் இரண்டில் இவை கொண்டுவரப்படும் என, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .